கோவை:கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சுவர் இடிந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்றும், உரிய இழப்பீடை பெற்றுத்தரக்கோரியும், பாதிக்கப்பட்ட மக்கள் சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.கமலம்மாள் என்பவர் கூறுகையில், ''கடந்தாண்டு டிச., 2ம் தேதி மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்த விபத்தில், 17 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் கட்டித்தருவதாக அரசு அறிவித்தது. விபத்தில், என் மருமகள் நதியா, பேரன் லோகுராம், பேத்தி அட்சயா, ஆகிய மூன்று பேர் பலியாயினர். ஆனால், இதுவரை எனக்கு எந்த நிவாரணத்தொகையோ, அரசு திட்டங்களோ கிடைக்கவில்லை. அரசு அறிவித்தபடி, நிவாரண இழப்பீட்டு தொகையை, பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதுபோன்று, நிவாரண தொகை கிடைக்காத, மேலும் சிலர் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE