கோவை:சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்த வங்கி கடன் ரூ.10 ஆயிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய, சமுதாய அமைப்பாளர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில், 6,169 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஊரடங்கு சமயத்தில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, சுயசார்பு திட்டத்தில், வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு, ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியது.மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, புதிதாக பதிவு செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து, 6,229 வியாபாரிகளுக்கு கடன் வழங்க விண்ணப்பிக்கப்பட்டது. இதில், 3,624 பேருக்கு கடன் வழங்க அனுமதி வழங்கிய போதிலும், 2,055 பேருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.நிலுவையில் உள்ள, 1,569 அனுமதி பெற்ற விண்ணப்பங்களுக்கு கடன் வழங்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சமுதாய அமைப்பாளர்கள் நேரில் சென்று, நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது; துணை கமிஷனர் மதுராந்தகி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி கமிஷனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE