திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது: சிறந்த பெண்கள் குழு, பெண்களுக்கான சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்களுக்கு மத்திய அரசு 'மகளிர் சக்தி' விருது வழங்குகிறது.நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம், தனிப்பட்ட நபர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். www.narishaktipuraskar.wயd.gov.in ல் 2021 ஜன. 7 க்குள் விண்ணப்பிக்கலாம். மகளிர் தினத்திற்கு முந்தைய வாரத்தில் டில்லியில் ஜனாபதிபதியால் விருது வழங்கப்படும் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE