பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றமிகு ஆத்துார் அணை எழில்மிகு ஆகுமா

Added : டிச 01, 2020
Share
Advertisement
-திண்டுக்கல்-- : திண்டுக்கல் ஆத்தூர் அருகே காமராஜர் அணை, 1955 ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டது.காமராஜர் அணை, திண்டுக்கல், சின்னாளபட்டி, ஆத்தூர், பள்ளபட்டி, பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், வக்கம்பட்டி பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கிறது. இருப்பினும் திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.இதன் மொத்த

-திண்டுக்கல்-- : திண்டுக்கல் ஆத்தூர் அருகே காமராஜர் அணை, 1955 ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டது.

காமராஜர் அணை, திண்டுக்கல், சின்னாளபட்டி, ஆத்தூர், பள்ளபட்டி, பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், வக்கம்பட்டி பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கிறது. இருப்பினும் திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.இதன் மொத்த உயரம் 23.5 அடி. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும், குடகனாறு, கூழையாற்றில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேர்கிறது. இந்த அணையின் நீர் முழுவதும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அணைக்கு வரும் நீரால், இடைவழியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைகின்றன.அணையின் தற்போதைய நிலைஅணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை முறையான பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை. குடிநீர் ஆதாரத்திற்காக அணை அருகே புதிதாக நீர்தேக்கத்தை விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அந்த வேலைகளும் முழுமையாக முடிவடையவில்லை.தற்போது, செல்லும் வழி மற்றும் அணையைச் சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. அணையைச் சுற்றிப்பார்க்க முடியாத அளவில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளன. சாலைகள், சுற்றுப்புறச் சுவர்கள் சிதிலமடைந்து உள்ளன.

அணைப்பகுதியில் மின் விளக்குகளுக்கே இடமில்லை.தற்போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அணையைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் ஏமாறுகின்றனர்.மலைப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, மாடு, மான் என ஏராளமான விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். போதிய தடுப்புகள் இல்லாததால் அவை ஊருக்குள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.சுற்றுலா பயணிகள் வருகைஅணையில் நீர் நிரம்பும் காலங்களில், மலைகளின் அடிவாரத்தில் உருவாகும் குட்டிக் கடல் போன்ற காட்சி காண்போரை கவரக்கூடியது. இதனைச் சுற்றிப்பார்க்க ஏராளமான பயணிகள் பொதுமக்கள் வருவதுண்டு. அவர்களுக்கு அணையைச் சுற்றியுள்ள தோப்புகள், நெல் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. ஆனால், தற்போது அணைப்பகுதிகளில் நடப்பதே சிரமமாக உள்ளது.பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆத்தூர் சடையாண்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி குளிக்கின்றனர். பாதுகாப்பு இல்லாமலும், முறையாக தூர்வாராததாலும் அணையில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.என்னதான் செய்யணும்இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல்வெளிகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த அணையை சுற்றுலா தலமாக மாற்றலாம். அதற்கென புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சிதிலமடைந்த சாலையை சீர்படுத்தினாலே போக்குவரத்திற்கு தடையிருக்காது.மின்விளக்குகள் அமைத்தால் மின்னொளியில் அணை நீர், மலைகளுக்கு இடையில் மின்னுவதை காணலாம். விசாலமான பகுதி என்பதால் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கி சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை அமைக்கலாம்.பார்க்கிங், சிற்றுண்டி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மீன்கள், இயற்கை பொருட்கள், அரிய வகை தாவரங்கள் போன்றவற்றை கண்காட்சி போல் ஏற்படுத்தி அதன் வாயிலாகவும் வருவாய் ஈட்ட மாநகராட்சி முயற்சிக்கலாம்.சுற்றுலா தலமாக மாற்றினால் திண்டுக்கல்லின் மற்றொரு அடையாளமாக காமராஜர் நீர்தேக்கம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.அடிப்படை வசதிகளே இல்லை.சுற்றுலா பயணி நாகேந்திரன் கூறியதாவது: குடும்பத்தினரோடு வந்தோம். அமர்வதற்கோ, சாப்பிடுவதற்கோ எந்த ஒரு வசதியுமே இங்கில்லை. அதனால் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இயற்கையை ரசிக்க சிறந்த இடம். ஆனால் அணையை தவிர வேறொன்றுமில்லை, என்றார்.நடவடிக்கை தேவைசுற்றுலா பயணி சித்ராதேவி கூறியதாவது: மாலை நேரத்தில் பார்க்க நீர்தேங்கி இருப்பது கடல் போல் காட்சியளிக்கிறது. இங்கு வாகனம் நிறுத்த கூட வழியில்லை. பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் குழந்தைகள் சந்தோஷப்படுவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும், என்றார்.மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: சமீபத்தில்தான் பொறுப்பேற்றுள்ளேன். முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.-தி.ஆறுமுகப்பாண்டிபடம்: கே.மணிகண்டன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X