எல்லை தாண்டி லஞ்ச வேட்டை... தொல்லை கொடுக்கும் ஆபீசரின் சேட்டை!

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020
Advertisement
மழை மேகங்கள் திரண்ட காலை பொழுது. சித்ராவும், மித்ராவும், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு, ஒரு சான்றிதழ் வாங்க, சென்றனர். அதிகாரியின் வருகைக்காக, வராண்டாவில் அமர்ந்தனர்.''இந்த ஆபீஸ், அதிகாரியின் கைக்குள் இல்லைன்னு பேசிக்கிறாங்க, மித்து, '' ஆரம்பித்தாள் சித்ரா.''எப்டி சொல்றீங்க்கா...?''''எந்த வேலைன்னாலும், புரோக்கர் மூலமா போய், பணத்த கொடுத்தாதான்
 எல்லை தாண்டி லஞ்ச வேட்டை... தொல்லை கொடுக்கும் ஆபீசரின் சேட்டை!

மழை மேகங்கள் திரண்ட காலை பொழுது. சித்ராவும், மித்ராவும், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு, ஒரு சான்றிதழ் வாங்க, சென்றனர். அதிகாரியின் வருகைக்காக, வராண்டாவில் அமர்ந்தனர்.

''இந்த ஆபீஸ், அதிகாரியின் கைக்குள் இல்லைன்னு பேசிக்கிறாங்க, மித்து, '' ஆரம்பித்தாள் சித்ரா.'

'எப்டி சொல்றீங்க்கா...?''

''எந்த வேலைன்னாலும், புரோக்கர் மூலமா போய், பணத்த கொடுத்தாதான் நடக்குதாம். 'ரிட்டையர்டு' ஆன ஒரு வி.ஏ.ஓ., அசிஸ்டென்ட், தனக்கு வர வேண்டிய பணப்பலனை வாங்க, நடையா நடந்துகிட்டு இருந்திருக்காரு. 'கவனிச்சா' தான் வேலை நடக்கும்ணு, பேரம் பேசறாங்கன்னு மனுஷன் நொந்துட்டார். இந்த விஷயத்தை, ஆதாரத்தோட, கலெக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண சங்கத்துக்காரங்க தயாராகிட்டாங்க...

''அவர்களை கடந்து போன ஒரு மூதாட்டி, ''கதிரவன் சாரை பாக்கோணும். எப்ப வருவாரு?'' என கேட்க, ''உள்ளே போய் கேளுங்க ,'' என அலுவலகத்தை நோக்கி கை காட்டினாள் மித்ரா.

''லஞ்சத்தை ஒழிக்கத்தான் 'ஆன்லைன்' சிஸ்டம் வந்திருக்கு. ஆனாலும், நம்ம அதிகாரிங்க கலெக்ஷன் பாக்காம விட மாட்டாங்க…'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''யாரடி சொல்ற…''''கார்ப்பரேஷன்ல, பர்த் சர்டிபிகேட் வாங்க, ஆன்லைனில் விண்ணப்பிச்சு, அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ததுக்கு அப்புறம், சம்மந்தப்பட்ட ஆபீசரின் 'சைன்' வாங்க, 'கவனிச்சா'தான் காரியம் நடக்குதாம்,'' என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த அதிகாரி வரவே, சான்றிதழ் வாங்கி கொண்டு புறப்பட்டனர்.

அப்போது, கூட்டமாக வந்த சிலர், 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்கக்கூடாது என மனு அளிக்க வந்திருந்தனர்.அதை கேள்விப்பட்ட சித்ரா, 'இந்த 'டாஸ்மாக்' விவகாரம் எல்லா பக்கமும், பெரும் பிரச்னையா இருக்குது போல...'' என்றாள்.

''ஆமாங்க்கா. வாலிபாளையத்துல கடை திறக்க, மக்கள், எதிர்ப்பு தெரிவிச்சாங்க. போராட்டத்துக்கு, தி.மு.க., அப்புறம், காங்கிரசை சேர்ந்த வி.ஐ.பி,யும் ெஹல்ப் பண்றாங்களாம்,''

''என்னடா, ஆடு நனையுதுன்னு, ஓநாய் கவலைப்பட்ட கதையா இருக்குதுன்னு, விசாரிச்சா, அவங்க ரெண்டு பேரும் நடத்துற ஓட்டலில், சரக்கு விற்பனை, கனஜோரா நடக்குதாம். 'டாஸ்மாக்' வந்துட்டா, பிசினஸ் அடிபடும்னு நல்ல எண்ணம்தான் காரணமாம்,'' சொன்ன மித்ரா, ''அக்கா மழை வர்ற மாதிரி இருக்கு. வெயிட் பண்ணலாமா...'' என்றாள்.

''வேற வழி, கொஞ்ச நேரம் பாத்துட்டு போலாம்,'' என்ற சித்ரா, பார்க்கிங் திட்டில் அமர்ந்தாள்.

''டாஸ்மாக் பத்தி இன்னொரு விஷயத்தையும் கேளு,'' என்ற சித்ரா, ''நெருப்பெரிச்சல் கிராமத்தில, மதுக்கடைய மூடோணும்னு, பொதுமக்கள் போராட்டம் நடத்தினாங்க. 90 நாட்களுக்குள் கடையை மாத்திடறோம்னு, அதிகாரிகளும் உறுதி கொடுத்தாங்க...''

''ஆனா, மாத்தலையாம். காரணம் என்னன்னு விசாரிச்சா, அதிகாரிகள சரிக்கட்டின, நிலத்தோட உரிமையாளர், 'பார்' வாடகை மூலமாக கிடைக்கிற வருமானம் இல்லைன்னா, வாழவே முடியாதுன்னு சொல்லி, கோர்ட்ல கேஸ் போட்டுட்டாராம்...''

''இத தெரிஞ்சு, கொதிச்சுப்போன மக்கள், பல கோடி ரூபாய்க்கு அதிபதியா இருந்துட்டு, 'ராம நாமம்' சொல்லிட்டு, இப்டி பண்றாரேன்னு வெகுண்டெழுந்து, அடுத்த கட்ட போராட்டத்துக்கு ரெடியாயிட்டு இருக்காங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.

மழை பெய்ய துவங்கியது. உடனே, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.''கொக்கி போட்டு கரன்ட் எடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி மேட்டர் தெரியுமா? என, மித்ரா சொல்ல, ''இது எங்கடி மித்து?'' கேட்டாள் சித்ரா.

''பல்லடத்தில, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தர், தன்னோட கம்பெனில லட்சக்கணக்குல கரண்ட் பில் பாக்கி வச்சிருக்காரு. மூனு மாசம் பொறுமையா இருந்த மின்வாரிய அதிகாரிங்க, லைனை 'கட்' பண்ணிட்டாங்க. இது தெரிஞ்ச அவர், தன்னோட இன்னொரு கம்பெனில இருந்து கொக்கி போட்டு லைன் எடுத்துட்டாரு,''

''தகவல் தெரிஞ்சு விசாரணைக்கு வந்த ஆபீசர்கிட்ட, நான் யாரு தெரியுமான்னு பில்டப் கொடுக்க, டென்ஷனான ஆபீசர், அந்த கனெக்ஷனையும் சேர்த்து 'கட்' பண்ணிட்டார். இதுல என்ன ஒரு மேட்டர்னா, கொக்கி போட்டு எடுத்த கனெக் ஷன்க்கும், லட்சக்கணக்குல கரன்ட் பில் பாக்கி இருக்காம்…'' என்றாள் சித்ரா.

சித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு…ராமமூர்த்தி அங்கிளா… நல்லா இருக்கீங்களா,'' என, இரண்டு நிமிடம் பேசி, இணைப்பை துண்டித்தாள்.அப்போது, டீ விற்பவர் வரவே, இருவரும், டீ வாங்கி குடிக்க துவங்கினர். ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, மழையையும் பொருட்படுத்தாமல், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் நெரிசலை சரி செய்து கொண்டிருந்தார்.

உடனே மித்ரா, ''டிரான்ஸ்பர் கிடைச்சும் போக மாட்டேன்னு, ஒரு ஸ்டேஷன் ஆபீசரு அடம் பிடிக்கிறாராம். அவருக்கு சவுத் வி.ஐ.பி., ரொம்ப சப்போர்ட்டா இருக்காராம்,'' என்றாள்.

'அடடே... வாங்க ஜெய்சங்கர் எப்படி இருக்கீங்க; வீட்ல எல்லாம் எப்டி இருக்காங்க?'' என, அருகில் வந்த ஒருவரிடம், நலம் விசாரித்தாள் சித்ரா.''அங்கே அப்டின்னா. வேலம்பாளையத்தில், ஒரு ஆபீசரு, எந்த வேலையா இருந்தாலும் கவனிப்பு இல்லாம செஞ்சு கொடுக்கிறது இல்லையாம்,'' என்றாள் சித்ரா.மித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது.

''ஹலோ… பொட்டுக்கார பிச்சைமணிங்களா?'' என எதிர்முனையில் இருந்தவர் கேட்க, 'சார்... ராங் நம்பர்' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.

அப்போது, கல்வித்துறையினர் ஜீப் சென்றதை பார்த்த மித்ரா, ''கல்வித்துறைல சத்தம் இல்லாம காசு பண்றாங்க அக்கா,'' என்றாள்.'

'எதை வச்சு சொல்றே?''

''ஆசிரியர் டிரான்ஸ்பர் சத்தம் இல்லாம நடக்குது. மாவட்டத்துக்குள் என்றால், ஒரு லட்சம், பிற மாவட்டம்னா, 2 லட்சம், அவரவர் விருப்பத்துக்கு டிரான்ஸ்பர் வேணும்னா, 3 லட்சம்ன்னு ரேட் பிக்ஸ் பண்ணி, கலெக்ஷன் அள்றாங்க. கலெக்ஷன் செஞ்சு பங்கு பிரிச்சு தர்ற வேலைய ஒரு ஆபீசரு பொறுப்பெடுத்து கச்சிதமா பண்றாராம்,'' என்றாள்.

''ஆமாமா. பக்கத்து வீட்ல இருக்க ரவி அண்ணா கூட, இத பத்தி சொன்னாரு. அப்ப, கல்வி அதிகாரிங்க காட்டில, காசு மழை பெய்யுதுன்னு சொல்லு,'' என, சிரித்த சித்ரா, ''சொல்ல மறந்துட்டேன், மித்து... எல்லை தாண்டிய லஞ்சவாதம் பத்தி கேள்விப்பட்டயா?'' என்றாள்.

''எல்லை தாண்டிய பயங்கரவதாம்னு கேட்டிருக்கேன். அக்கா, அதென்ன லஞ்சவாதம்?''

''மித்து, லிங்கேஸ்வரர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஒருத்தர், தெக்கலுார் ஏரியா 'பீட்'டில் ரோந்து போவார். அப்ப, அங்கிருக்கிறவங்க, பக்கத்திலுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இடத்தில், 'குட்கா குடோன்' இருக்குன்னு சொல்லியிருக்காங்க...''

''உடனே, மோப்பம் புடிச்ச அவர், சம்பந்தப்பட்ட இடத்துக்கு எல்லை தாண்டிப்போய், 2 லகரம் பேரம் பேசினாரு. 'குட்கா' ஆசாமியும், இவரை கண்டு பயந்து, ஒன்றரை லட்சத்தை போலீசுகிட்ட குடுத்திட்டு, எஸ்கேப் ஆகி, குடோனை வேற பக்கம் மாத்திட்டாராம்,''

''இத தெரிஞ்சுகிட்ட, அந்த மாவட்ட போலீஸ்காரங்க, கொந்தளிச்சு, இவர் மேல கம்ப்ளைன்ட் ரெடி பண்ணிட்டு இருக்காங்களாம்,''

''முருகா... இவங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டப்பா...'' என வானை நோக்கி கும்பிடு போட்ட மித்ரா, ''அக்கா... அந்த 'ஜொள்' ஆபீசர் இன்னும் திருந்தவேயில்லையாம்,'' என்றாள்.

''யாரு, கொண்டத்தம்மன் கோவில் குடி கொண்டுள்ள நிலைய ஆபீசர்தானே. ஏற்கனவே, பல கம்ப்ளைன்ட் போயும் அவர் திருந்தலையா. இதையெல்லாம், மாவட்ட அதிகாரி கண்டுகிட்டா பரவாயில்லை,'' என்று சித்ரா பேசி முடிக்கவும், துாவானம் விட்டது. உடனே, இருவரும் வண்டியில் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X