பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி, முருங்கை சாகுபடிக்கு மானியம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை வட்டாரத்தில் இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.தோட்டக்கலை உதவி இயக்குனர் பி.சித்தார்த்தன் கூறியது: தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் இயற்கை முறையில் ஏற்கனவே சாகுபடி செய்வோர், புதிதாக பின்பற்றுவோருக்கு மானியம் வழங்கப்படும்.காய்கறி, மரவள்ளிக் கிழங்கு, முருங்கை

வடமதுரை : வடமதுரை வட்டாரத்தில் இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பி.சித்தார்த்தன் கூறியது: தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் இயற்கை முறையில் ஏற்கனவே சாகுபடி செய்வோர், புதிதாக பின்பற்றுவோருக்கு மானியம் வழங்கப்படும்.காய்கறி, மரவள்ளிக் கிழங்கு, முருங்கை சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.4ஆயிரம் மானியம் உண்டு.

இயற்கை வழி சான்று பெற சிறு, குறு விவசாயிகள் ரூ.2,500, பெரிய விவசாயிகள் ரூ.3,500-ம் செலுத்தி பதிய வேண்டும்.விவசாயிகள் குழுவாகவும் விண்ணப்பிக்கலாம். ஒரு குழுவில் 25 முதல் 500 பேர் வரை இருக்கலாம். இதில் ஒவ்வொரு நபருக்கும் ரூ.500 மானியம் வழங்கப்படும். விபரங்களுக்கு 89485 06019 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X