பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் சூடு பிடித்த தேர்தல் பணி

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு செயல்படுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இருகட்சியினரும் கிராம நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கிராம நிர்வாகிகளை அடிக்கடி ஆன்லைன்,

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு செயல்படுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இருகட்சியினரும் கிராம நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கிராம நிர்வாகிகளை அடிக்கடி ஆன்லைன், நேரிடையாக சந்தித்து பேசுகின்றனர். இதனால் தொண்டர்களும் முழுவீச்சில் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிகளை விரைவாக செய்வதற்கு வசதியாக ஒன்றியத்தில் அ.தி.மு.க., இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, நடராஜன் ஆகியோர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பிரமுகர்களை சந்திக்கின்றனர். இதனால் அ.தி.மு.க.,வினரும் உற்சாகமாகிவிட்டனர்.இரண்டு கட்சியினரும் மாற்று கட்சியினரை தங்கள் முகாமில் சேர்ப்பது, வாக்களர் சிறப்பு முகாமில் புதிய வாக்களர்களை சேர்ப்பது என செயல்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X