பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோராகும் மதுரை சிறை கைதிகள்: சிறைத்துறை டி.ஐ.ஜி.,

Added : டிச 01, 2020
Share
Advertisement
மதுரை : ''சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் விடுதலைக்கு பிறகு கைதிகள் தொழில்முனைவோராக திகழ்கின்றனர்,'' என, மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி பேசினார்.அவர் பேசியதாவது:மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகள் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில்
 தொழில்முனைவோராகும் மதுரை சிறை கைதிகள்: சிறைத்துறை டி.ஐ.ஜி.,

மதுரை : ''சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் விடுதலைக்கு பிறகு கைதிகள் தொழில்முனைவோராக திகழ்கின்றனர்,'' என, மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி பேசினார்.

அவர் பேசியதாவது:மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகள் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்த இனிப்பு, காரம், மழைகோட், அலுவலக கவர் போன்ற பொருட்களை விற்க பிரிசன்பஜார் செயல்படுகிறது.

மதுரை கைதிகள் தயாரிக்கும் அலுவலக கவர்கள்மாநிலம் முழுவதும் விற்கப்படுகிறது. மேலும் மனம், உடல்நலம் காக்க யோகா, பிரணாயாமம், தியானப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன, என்றார்.அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X