மதுரை : மதுரை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மேலுார் கல்லம்பட்டியில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் கூறியதாவது: அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆடு, மாடு, கோழி, நாய்களுக்கான பாதுகாப்பு முகாம் நடக்கிறது. கால்நடை டாக்டர்கள் கிராமங்களுக்கு சென்று கால்நடை, நாய்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்குவர். இதனால் ஆடு, மாடு ஆரோக்கியமாகஇருப்பதுடன் பால்தரமாக இருக்கும். நாமும் 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மத்திரை சாப்பிடால் உணவில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்கும், என்றார்.கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜதிலகன், துணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர்கள் சரவணன், எம்.எஸ்.சரவணன், திருவள்ளுவன், வட்டார கால்நடை டாக்டர் கருணாகரன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE