பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் கிங்காங், கொரோனா, பிரேசிலா

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருவனந்தபுரம் : கேரளாவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், கிங்காங், கொரோனா பெயர்கள் கலக்கி வருகின்றன. இந்தப் பெயர்களில் வேட்பாளர் உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், வரும், 8 முதல், மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க

திருவனந்தபுரம் : கேரளாவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், கிங்காங், கொரோனா பெயர்கள் கலக்கி வருகின்றன. இந்தப் பெயர்களில் வேட்பாளர் உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், வரும், 8 முதல், மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.இந்தத் தேர்தலில், 36 ஆயிரத்து, 305 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 74 ஆயிரத்து, 899 பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில், கிங்காங், ராணி ஜான்சி, கொரோனா, ஜே.பி., - 77, பிரேசிலா, மோடி பெயர்கள் உடைய வேட்பாளர்கள், பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

காங்.,கைச் சேர்ந்த, கிங்காங், 57, மரைக்காகுளம் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது தந்தை, பாலிவுட் படங்களின் ரசிகர். அதனால், தனக்கு கிங்காங் என்று பெயரிட்டுள்ளதாக கூறுகிறார். 'இந்த பெயர் வைத்ததற்காக பலமுறை வருத்தப்பட்டு உள்ளேன். ஆனால், வினோதமாக உள்ளதால், மக்கள் மனதில் எளிதில் பதிவாகி விட்டது' என, கிங்காங் கூறியுள்ளார். கோழிக்கோடில் கயண்ணா கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர், ஜே.பி., - 77, பெயரும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இவருடைய தந்தை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தீவிரமாக இருந்தவர். ஜெயபிரகாஷ் நாராயண் மீதான மரியாதையில் மகனுக்கு, ஜே.பி., என்று பெயர் வைக்க நினைத்துள்ளார்.

கடந்த, 1977ல், அவசர நிலையின் போது, சிறைக்கு சென்றதால், மகனுக்கு, ஜே.பி., - 77 என்று பெயர் வைத்துள்ளார். கொல்லம் மாநகராட்சியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரின் பெயர், தற்போது அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. இவருக்கு பெயர் வைத்தபோது, இவ்வளவு பிரபலமாவார் என, அவரது பெற்றோர் நினைத்திருக்கமாட்டர். தற்போது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கிறார், கொரோனா தாமஸ். பத்தினம் திட்டா மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் பத்திரிகையாளர், ஜிஜோ மோடி, அந்தப் பகுதியில் பிரபலமாகி விட்டார்.இதபோல், பிரேசிலா, ராணி ஜான்சி ஆகிய பெயர்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் பிரபலமாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X