பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக புத்தாக்க திட்டம்: 942 பேருக்கு கடனுதவி

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திற்கு, 9.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடனுதவி அளிக்கப்பட்டுள்ளன.அதன்படி, இதுவரை, ஊராட்சி கூட்டமைப்பு வாயிலாக, 1,427 நபர்களுக்கு, தலா, 50 ஆயிரம் வீதம் 4.88 கோடி ரூபாய் மதிப்பில் தனிநபர் தொழில் கடன் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2,646 நபர்கள் அடங்கிய, 49 உற்பத்தியாளர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை

திருப்பூர்:தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திற்கு, 9.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடனுதவி அளிக்கப்பட்டுள்ளன.அதன்படி, இதுவரை, ஊராட்சி கூட்டமைப்பு வாயிலாக, 1,427 நபர்களுக்கு, தலா, 50 ஆயிரம் வீதம் 4.88 கோடி ரூபாய் மதிப்பில் தனிநபர் தொழில் கடன் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2,646 நபர்கள் அடங்கிய, 49 உற்பத்தியாளர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக, தலா, 1.50 லட்சம் வீதம், 73.50 லட்சம் ரூபாய்; 138 நபர்கள் அடங்கிய, 9 தொழில் குழுக்களுக்கு, தலா, 1.50 லட்சம் வீதம், 13.50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய வேலையில்லாத, 60 இளைஞர்களுக்கு, தொழில் துவங்க கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் வாயிலாக தலா ஒரு லட்சம் வீதம், 60 லட்ச ரூபாய்; மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள் என நலிவுற்றோர் தொழில் மேம்பாட்டிற்காக, 942 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில் மூலதன நிதியாக, தலா, 20 ஆயிரம் வீதம், 1,525 கோடி ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், பலருக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X