பொது செய்தி

இந்தியா

மருத்துவமனைகளில் தீ தடுப்பு ; மத்திய உள்துறை செயலர் கடிதம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி : 'மருத்துவமனைகளில் தீ விபத்துகளை தடுக்க, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில், சமீபத்தில் நடந்த தீ விபத்தில், சிகிச்சையில் இருந்த ஆறு பேர்

புதுடில்லி : 'மருத்துவமனைகளில் தீ விபத்துகளை தடுக்க, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில், சமீபத்தில் நடந்த தீ விபத்தில், சிகிச்சையில் இருந்த ஆறு பேர் பலியாயினர். இதையடுத்து, மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது; குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் பலியாயினர்.

ஆமதாபாத் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர். மருத்துவ னைகளில் தீ விபத்துகளை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது கவலை அளிக்கிறது.கொரோனாவை எதிர்த்து நாம் தீவிரமாக போராடும் நேரத்தில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். துபோன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தீ தடுப்புக்கான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது மற்றும் தப்புவதற்கான கட்டமைப்புகளை, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X