சென்னை : ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில், வரும், 5ம் தேதி, முதல்வர் மற்றும் துணை முதல்வர், அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, ஜெயலலிதா நினைவிடத்தில், வரும், 5ம் தேதி காலை, 10:45 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.மேலும், கட்சி நிர்வாகிகள், அனைத்து பகுதிகளிலும், ஜெயலலிதா உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட செயலர்கள் செய்ய வேண்டும் என, கட்சி தலைமை கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE