திருப்பூர்:திருமண மண்டபங்களில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மண்டபங்களில், பொதுமக்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிப்பதில்லை.வருவாய் துறையினர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.அரசு அறிவுறுத்திய, நெறிமுறைகளைப் பின்பற்றாத திருமண மண்டப உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று பெருமளவு குறைந்துவந்தாலும், நெறிமுறைகள் பின்பற்றுவதில், எந்த அலட்சியமும் கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE