பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 கோடியில் சுழல் நிதிஅரசாணை வெளியீடு

Added : டிச 01, 2020
Share
Advertisement
சென்னை : அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு உதவ, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில், 16 கோடி ரூபாயில், சுழல் நிதி உருவாக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியது.அதன்படி, மருத்துவ

சென்னை : அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு உதவ, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில், 16 கோடி ரூபாயில், சுழல் நிதி உருவாக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியது.அதன்படி, மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால், சுமை ஏற்படாமல் இருக்க, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்களை நடைமுறைப்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் சேர, ஆணை பெற்றுள்ள, அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்த, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி உருவாக்க, முதல்வர் உத்தரவிட்டார்.அந்த நிதியில் இருந்து, மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்களை, அரசு நேரடியாக கல்லுாரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என, முதல்வர் அறிவித்தார்.அதன்படி, 16 கோடி ரூபாயில், சுழல் நிதி உருவாக்க அனுமதி அளித்து, சுகாதாரத் துறை சார்பில், நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X