சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின், ரூ.2 கோடி கபளீகரம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்பூர்:இ-மெயில் முகவரியை 'ஹேக்' செய்து, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின், 2 கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர்.திருப்பூரைச்சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம், ஜெர்மனி, ஆஸ்திரேலிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்நிறுவனம், இரு நாட்டு வர்த்தகர்களுக்கும், மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை அனுப்பியது.ஆடைக்கான தொகையை

திருப்பூர்:இ-மெயில் முகவரியை 'ஹேக்' செய்து, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின், 2 கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர்.திருப்பூரைச்சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம், ஜெர்மனி, ஆஸ்திரேலிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கிறது.
சமீபத்தில் இந்நிறுவனம், இரு நாட்டு வர்த்தகர்களுக்கும், மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை அனுப்பியது.ஆடைக்கான தொகையை வெளிநாட்டு வர்த்தகர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டனர். ஆனால், தொகை, கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து, ஆடை ஏற்றுமதி நிறுவனம், வெளிநாட்டு வர்த்தகர்களை தொடர்புகொண்டு விசாரித்தபோதுதான், அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.சம்பந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்தின் இ-மெயிலை, மர்ம நபர்கள் 'ஹேக்' செய்துள்ளனர். ஆடை ஏற்றுமதி நிறுவனம், தனது வங்கி கணக்கு விவரங்களை ஏற்கனவே வர்த்தகருக்கு அளித்திருந்தது.பழைய வங்கி கணக்கிற்கு பதில், தங்களது வங்கி கணக்கை இணைத்து, புதிய வங்கி கணக்கிற்கு ஆடைக்கான தொகை அனுப்புமாறு, ஹேக்கர்கள் இ-மெயில் அனுப்பியுள்ளனர்.ஏற்றுமதியாளரின் இ-மெயிலிலிருந்து அனுப்பப்பட்டதால், உண்மையென நம்பிய வர்த்தகர்களும், 2 கோடி ரூபாயை, ஹேக்கர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) செயற்குழு உறுப்பினர் குமார் துரைசாமி கூறியதாவது:சட்ட நடவடிக்கை மூலம், ஹேக்கரின் வங்கி கணக்கை முடக்குவது; ஏற்றுமதி நிறுவனத்தின் தொகையை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி ஆவணங்களை வர்த்தகரின் வங்கிக்கு அனுப்பி வைத்து, ஆடைக்கான தொகையை பெறும் வழிமுறை மிகவும் பாதுகாப்பானது.
இதுபோன்று, இ-மெயிலில் ஆவணங்கள், வங்கி விவரங்களை அனுப்பி, தொகை பெறுவது, சைபர் குற்றம் நிறைந்த இக்காலத்தில் பாதுகாப்பற்றது.புதிய வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினாலும், போன், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதுகுறித்து, ஏற்றுமதி நிறுவனங்கள், தாங்கள் தொடர்புவைத்துள்ள வர்த்தகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X