திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியின், 44வது வார்டுக்கு உட்பட்டது, பூளவாரி சுகுமார்நகர். அப்பகுதியில், 450க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன; ஏழை, எளிய மக்கள், நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர்.கடந்த, 1994ல், தமிழ்நாடு குடிமை மாற்று வாரியத்தின் மூலமாக, மக்கள் குடியிருப்பு வரன்முறை செய்யப்பட்டன. அப்பகுதியில் வசித்த மக்கள், தங்களின் இடத்துக்கான நிர்ணய தொகையை, தவணை முறையில் செலுத்தினர்.முழு தொகையை செலுத்திய பின்னரும், குடிசை மாற்று வாரியம் அதற்கான பத்திரத்தை வழங்காமல் இழுத்தடிக்கிறது. பணம் செலுத்திவிட்டதால், உடனே கிரய பத்திரம் வழங்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'குடிசை மாற்று வாரியம் வரன்முறை செய்தபடி, தவணை தொகையை முறையாக செலுத்திவிட்டோம். நான்கு ஆண்டுகளாக, அசல் பத்திரத்தை வழங்காமல், வாரியம் காலம் கடத்தி வருகிறது.குடியிருப்பு மேம்பாட்டு பணிகளை செய்ய வசதியாக, உடனடியாக, அசல் ஆவணத்தை வழங்க உத்தரவிட வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE