திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் நேற்று 108 சங்காபி ேஷகம் நடந்தது.சங்குகளில் புனித நீர் நிரப்பி வைத்து யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சொக்கநாதருக்கு சங்குகளில் இருந்த புனிதநீர் அபிேஷகம் செய்யப்பட்டது. கோயில் நிர்வாகிகள் பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்தனர்.கூடல்மலைத் தெரு கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் காலை, மாலையில் 108 சங்கா பிஷேகம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE