பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை களமாகும் காளம்பாளையம்!

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்பூர்:பசுமை பரப்பை விஸ்தரிப்பு செய்யும், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், காளம்பாளையத்தில், 3,280மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, ஓரிரு வாரங்களில் பூர்த்தியாக இருக்கிறது. அதற்கான, பசுமை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால், தரிசு நிலங்களை, பசுமை மரக்கன்றுகள் அலங்கரித்து வருகின்றன.

திருப்பூர்:பசுமை பரப்பை விஸ்தரிப்பு செய்யும், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், காளம்பாளையத்தில், 3,280மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, ஓரிரு வாரங்களில் பூர்த்தியாக இருக்கிறது. அதற்கான, பசுமை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால், தரிசு நிலங்களை, பசுமை மரக்கன்றுகள் அலங்கரித்து வருகின்றன. ஆறாவது திட்டத்தின், 81வது நிகழ்வு நேற்று காளம்பாளையத்தில் நடந்தது. அங்குள்ள, 3.50 ஏக்கர் நிலத்தில், 3,280 மரக்கன்றுகள் நடப்பட்டன.தோட்ட நில உரிமையாளர் மனோஜ், பிரியதர்ஷினி, ஜானு ரிட, ஸ்ரேயா, மான்வி, அஞ்சனா உள்ளிட்ேடார், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினருடன் இணைந்து, மரக்கன்றுகள் நட்டனர்.இலுப்பை, வேம்பு, சிசு, புங்கன், நாவல், சொர்க்கம், புளி, நாட்டு அத்தி, சவுக்கு உட்பட, 3,280 மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்றஎண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X