ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தொட்டி அமைத்துக்கொள்ள, வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:நடப்பு பருவத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, ஆனைமலை ஒன்றியத்துக்கு, 865 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.ஏழாண்டுகளுக்கு முன், சொட்டு நீர் அமைத்த விவசாயிகளும், இந்த மானியத்தில் குழாய்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.மேலும், டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் பம்புசெட் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய், கிணறு, ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் பொருத்த, ஒரு விவசாயிக்கு, பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அதேபோன்று, நீரை தேக்குவதற்காக தரைநிலை தண்ணீர் தொட்டிகள் அமைக்க ஒரு தொட்டிக்கு, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE