பொது செய்தி

தமிழ்நாடு

செல்லூர் கண்மாய் நீரில் பொங்கிய நுரைக்கு ரசாயனம் காரணமில்லை:மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 'கண்டுபிடிப்பு'

Added : டிச 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: 'மதுரை செல்லுார் கண்மாய் மறுகால் நீரில் பொங்கிய நுரைக்கு ரசாயன கழிவுகள் காரணம் இல்லை' என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்துள்ளது.சில நாட்களுக்கு முன் செல்லுார் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் பாய்ந்த உபரிநீரில் ராட்சத நுரை கிளம்பியது. குலமங்கலம் ரோடு பாலத்தில் முட்டி 20 அடி உயரத்திற்கு மலை போன்று எழும்பியது. சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டனர்.
செல்லூர் கண்மாய் நீரில் பொங்கிய நுரைக்கு ரசாயனம் காரணமில்லை:மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 'கண்டுபிடிப்பு'

மதுரை: 'மதுரை செல்லுார் கண்மாய் மறுகால் நீரில் பொங்கிய நுரைக்கு ரசாயன கழிவுகள் காரணம் இல்லை' என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் செல்லுார் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் பாய்ந்த உபரிநீரில் ராட்சத நுரை கிளம்பியது. குலமங்கலம் ரோடு பாலத்தில் முட்டி 20 அடி உயரத்திற்கு மலை போன்று எழும்பியது. சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டனர். கழிவுநீர், ரசாயன கழிவு சேர்ந்ததால் நொய்யல் ஆறு போல நுரை பொங்கியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

கண்மாய் நீரின் மாதிரியை சேகரித்து பரிசோதிக்க கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.நீரை சேகரித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதித்தனர். முடிவை கலெக்டருக்கு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் கூறியதாவது: நீரை பரிசோதித்ததில் ரசாயனம் கலக்கவில்லை என தெரிந்தது. குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் வழக்கமான கழிவு, ஆகாயத்தாமரை ஆகியவற்றின் விளைவாக நுரை பொங்கி இருக்கலாம். முதலில் தான் நுரை வந்தது. பிறகு வழக்கம் போல நீர் சென்றது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-202007:46:58 IST Report Abuse
ஆப்பு கண்மாய்ல யாரோ சர்ஃப் எக்செல் மூட்டையைக் கொட்டிட்டாங்க போலிருக்கு.
Rate this:
02-டிச-202006:44:15 IST Report Abuse
பண்டாரம் பாபுமொக்கை காமெடி. சிரிப்பு வரவே இல்லை அவ்வளவு மொக்கை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X