பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி கூட்டுறவு ஆலை நிர்வாக குழு கூட்டம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்;மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள, பிரி சுகர் மார்ஜின், 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் குறைத்து, 2021, மார்ச் 31 வரை வங்கியில் தொகை பெற்றுக்கொள்வது குறித்தும், சர்க்கரை

மடத்துக்குளம்;மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள, பிரி சுகர் மார்ஜின், 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் குறைத்து, 2021, மார்ச் 31 வரை வங்கியில் தொகை பெற்றுக்கொள்வது குறித்தும், சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையின், 2020- -21 ஆம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையை அங்கீகரிப்பது, என தீர்மானிக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில், ஆலை இயக்கத்திற்கு தேவையான இயந்திரம் மற்றும் உதிரிபாகங்கள், போக்குவரத்து செலவினங்கள், 9.70 லட்சம் ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக செலவு செய்த இந்த தொகை குறித்தும், ஆலைப்பகுதியில் குளம் வெட்டுவதற்காக மண் எடுக்க அனுமதிப்பது, 2018 -- 19 அரவை பருவத்தில், 1,27,460 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட கரும்பு வெட்டுவோர் மற்றும் அங்கத்தினர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்குவது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X