பொள்ளாச்சி:பொள்ளாச்சி குமரன் நகரில், பழமையான கிணறு பராமரிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி குமரன் நகர் ரங்கசாமி லே-அவுட் பகுதியில், பழமையான கிணறு உள்ளது. மொத்தம், 50 அடி ஆழம் உள்ள கிணற்றில், 20 அடி தண்ணீர் உள்ளது.கிணற்று நீர், பொது கழிப்பிடம் மற்றும் அங்கு குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும், குடியிருப்பு பகுதிக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கிணற்றில் நீர் இருந்தாலும், குப்பை, பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய பொருட்களை கொட்டியுள்ளனர். இதனால், பராமரிப்பின்றி குப்பை கொட்டும் இடமாக மாறியது.கிணற்றை துார்வார வேண்டும் என பல ஆண்டுகாலமாக மக்கள், இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நகராட்சி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கிணறு துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பணியாளர்கள், கிணற்றில் இறங்கி கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கிணறு தண்ணீர் மீண்டும் மாசுபடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மொத்தம், 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில், கிணறு துார்வாருதல் தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.'கிணற்றை சுற்றிலும் உயரமாக பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து, குப்பை கொட்டுவது தடுக்கப்படும். பணிகள் முடிந்ததும், குடியிருப்பு பகுதிகளுக்கு கிணற்று நீர் வினியோகம் துவங்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE