உடுமலை:வாழை சாகுபடியில், வேகமாக பரவி வரும் இலைப்புள்ளி நோய்த்தாக்குதலால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இலை வாழை உட்பட பல்வேறு ரகங்கள் இப்பகுதியில், பராமரிக்கப்படுகிறது. ஓராண்டு பயிரான வாழையில், ஒவ்வொரு சீசனிலும், பரவும் நோய்த்தாக்குதலால், மகசூல் பாதிக்கிறது. தொடர் மழைக்குப்பிறகு, சாகுபடியில், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.தற்போது, இலைப்புள்ளி நோயால், வாழை இலைகளில், மஞ்சள் நிறத்தில், புள்ளிகள் தோன்றி, குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு, பழுப்பு நிறத்தில், மாறி விடுகிறது. பின்னர், இலை முழுவதும் இத்தாக்குதல், பரவி, இலை முழுவதும் வாடி விடுகிறது. போடிபட்டி சுற்றுப்பகுதிகளில், நுாற்றுக்கணக்கான மரங்களில், இந்த நோய்த்தாக்குதல் ஏற்பட்டு பரவி வருகிறது.விவசாயிகள் கூறியதாவது: வாழை குலை தள்ளும் போது, குறிப்பிட்ட அளவு இலைகள் இருந்தால் மட்டுமே, குலை ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், தற்போது பரவி வரும் நோய்த்தாக்குதலால்,இலைகள் வாடி, மரத்தின் இயல்பான வளர்ச்சி குறைகிறது; குலைகளும், சிறுத்து போகும் அபாயம் உள்ளது.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய பரிந்துரை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஓராண்டு வரை, பராமரித்த, சாகுபடியில் நஷ்டமே ஏற்படும். அதற்கு, முன்பாகவே, நோய்த்தடுப்பு பரிந்துரைகளை தெரிவித்து, வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE