மதுரை : மதுரை கருப்பாயூரணி ஊராட்சி மீனாட்சி கார்டன் பகுதியில் பத்தாண்டுகளாக மின்விளக்குகள், குடிநீர் வசதி செய்யப்படவில்லை.
கள்ளந்திரி கால்வாயிலிருந்து கருப்பாயூரணி கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் பாதையில் மீனாட்சி கார்டன் உள்ளது. தெருக்கள் வாரியாக குடியிருப்புகள் பிரிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் மெயின்ரோடு, சந்து ரோடு எதிலும் தார்பூச்சு இல்லை. கால்வாய் கரையையொட்டிய ரோடு என்பதால், பொதுப்பணித் துறை அனுமதியின்றி ரோடு அமைக்க முடியாத நிலையுள்ளது. மெயின் ரோட்டில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை கால்வாய் நீரில் கொட்டுகின்றனர்.
சிமென்ட் சாக்குகளை அலசி விடுவதால் அதுவும் சேர்ந்து நீரை மாசுபடுத்துகிறது. குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கால்வாயில் மிதக்க விடுகின்றனர். தொட்டி வைக்கப்பட்டிருந்தாலும் குப்பைகள் ரோட்டில் கிடக்கிறது. இப்பகுதி குடியிருப்பாக மாறி பத்தாண்டுகள் ஆனாலும் இதுவரை அடிப்படை வசதிகள் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE