சென்னை : சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்க, அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்யும் விதமாக, தலைமை செயலர் கண்காணிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு ஆணையராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, அதிகாரி சகாயம் ஆய்வு செய்து, 2015ல், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். கடிதம் தாக்கல்இந்நிலையில், புதிய குழு அமைத்து, இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்யக்கோரி, தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தலைமை செயலர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அடங்கிய மர்வு பிறப்பித்த உத்தரவு:நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், நிதி பற்றாக்குறை என, கலெக்டர்கள் எப்படி கூறுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அரசை அணுகி பெறுவதில், கலெக்டர்களை யாரும் தடுக்கவில்லை. மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் நிதி இல்லை என்றால், வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அல்லது அண்டை மாவட்டங்களில் இருந்து உபரி நிதியை பெற்றுக் கொள்ளலாம்;
இல்லையேல் அரசை அணுகலாம். ஆறு மாவட்டங்களைப் பொறுத்தவரை, புதிய இடங்களை கண்டறிந்து, வரும், 21க்குள், மாவட்ட எஸ்.பி.,க்கள் தெரிவிக்க வேண்டும். தெளிவாக இல்லைகோவை, அரியலுார்,சேலம் உள்ளிட்ட, 21 மாவட்டங்களைப் பொறுத்தவரை, எத்தகைய நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் உள்ளது என்பது தெளிவாக இல்லை.சட்டவிரோத கனிமங்கள்கடத்தலை தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்பதால், விரைவில், இந்த மாவட்டங்களில் பொருத்துவது குறித்து, தலைமை செயலர் கவனிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் விஷயத்தில், தலைமை செயலர் கண்காணிக்க வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். சகாயத்திற்கு பாதுகாப்புஅளிக்க உத்தரவுசிறப்பு ஆணையர் சகாயம் மற்றும் அதிகாரிகளுக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அறிக்கை தாக்கலுக்கு பின், அந்தப் பணியில் இருந்து, 2018 மார்ச்சில் அதிகாரி சகாயம் விடுவிக்கப்பட்டார். அப்போது, விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு உள்ள அச்சுறுத்தலை கருதி, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.
அதிகாரி சகாயத்துக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு, சமீபத்தில், விலக்கி கொள்ளப்பட்டது குறித்து, நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். நீதிமன்ற உத்தரவுப்படி அளிக்கப் பட்டிருந்த பாதுகாப்பை, வாபஸ் பெறக் கூடாது; தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE