பொது செய்தி

தமிழ்நாடு

வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி தொழிலுக்கு.சோதனை மேல் சோதனை!

Added : டிச 01, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதி, வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், தொடர்ந்து, முன்னிலை வகிக்கவும், அத்தொழில், பாதிப்பிலிருந்து மீளவும், நிலையான விலை உட்பட மாற்றுத்திட்டங்களை பட்டு வளர்ச்சித்துறை மூலம், அரசு செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து கச்சாப்பட்டு இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய, மாநில அரசு சார்பில்,

உடுமலை:உடுமலை பகுதி, வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், தொடர்ந்து, முன்னிலை வகிக்கவும், அத்தொழில், பாதிப்பிலிருந்து மீளவும், நிலையான விலை உட்பட மாற்றுத்திட்டங்களை பட்டு வளர்ச்சித்துறை மூலம், அரசு செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து கச்சாப்பட்டு இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.மத்திய அரசின், பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் வாயிலாக, தொழில்நுட்ப பயிற்சிகளும், மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், மானியத்திட்டங்களும், விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்தொழில்நுட்பங்களை பின்பற்றி, தரமான வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டினர். எனவே, இப்பகுதியில் மட்டும், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, நாள்தோறும், 2 மெட்ரிக்., டன் அளவுக்கு, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியாகும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது.இவ்வாறு, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், மாநிலத்தில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது. ஆனால், கடந்த சில மாதங்களாக, சூழ்நிலை தலைகீழாக மாறி, பட்டுக்கூடு வளர்ப்பை கைவிட்டு, மல்பெரி தோட்டங்களையும், ஆங்காங்கே, அழிக்கும் நிலை உடுமலை பகுதியில், அதிகரித்துள்ளது. இத்தொழிலில், அதிக ஆர்வம் காட்டி வந்த, சின்னவீரம்பட்டி கிராமத்திலேயே மல்பெரி தோட்டங்கள் சமீபத்தில், அழிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: வெண்பட்டுக்கூடு வளர்ப்பு தொழில், அதிக தொழில்நுட்பங்கள் உடையதாகும். முன்பு, பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தரமில்லாத முட்டை தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வாக, இளம்புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, சில நாட்கள் பராமரிக்கப்பட்ட, புழுக்களை பெற்று வளர்ப்பில், ஈடுபட்டோம். தற்போது, இளம் புழுக்களிலும், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, பட்டுக்கூடு உற்பத்தி குறைகிறது. ஆனால், எவ்வித தொழில்நுட்ப வழிகாட்டுதலும், பட்டு வளர்ச்சித்துறையால் வழங்கப்படுவதில்லை.புழு வளர்ப்பு மனைகளில், பட்டுப்புழு வளர்க்கும் போது, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளுக்கான செலவு மற்றும் இடுபொருட்கள் விலையும் கூடுதலாகியுள்ளது. ஆனால், பட்டு வளர்ச்சித்துறையின் மானியத்திட்டங்களிலும், மாறுதல் இல்லாமல், பழைய அளவீடுகளின் படியே பின்னேற்பு மானியம் கிடைக்கிறது.புழு வளர்ப்பு மனை அமைக்க, சராசரியாக 5 லட்சம் ரூபாய் வரையும், மல்பெரி செடிகள் நடவு செய்து பராமரிக்கவும், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு தேவையுள்ளது.புழு, நோய்த்தடுப்பு மருந்து, மல்பெரி இலைகளை அறுவடை செய்து, உணவாக அளித்தல், கூடு கட்டும் பருவத்தில், 'பெட்' மாற்றுதல் உட்பட அதிக தொழிலாளர் தேவை உள்ளது. ஆனால், போதிய விலை கிடைப்பதில்லை.உற்பத்தி குறைவு, அரசு கொள்முதல் மையங்களில், நிலையான விலை கிடைக்காததால், பலர் இத்தொழிலை கைவிட்டு வருகின்றனர். ஆதார விலை நிர்ணயித்து, தரமான பட்டு முட்டைகள் கிடைக்கவும் அரசு வழிவகை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X