பணிகளுக்கு முட்டுக்கட்டை: துணைத்தலைவர் மீது புகார்

Added : டிச 01, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:'வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஊராட்சி துணைத்தலைவர், சில வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவர் மயில்சாமி மற்றும் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தெற்கு

பொள்ளாச்சி:'வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஊராட்சி துணைத்தலைவர், சில வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டணம் ஊராட்சி தலைவர் மயில்சாமி மற்றும் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், எஸ். மலையாண்டிபட்டணம் ஊராட்சி துணைத்தலைவராக ரவி உள்ளார். ஊராட்சி தலைவர் வார்டு வாரியாக தினமும் வந்து குறைகளை கேட்டறிந்து அத்தியவாசிய தேவைகளை உடனுக்குடன் செய்து வருகிறார்.இந்நிலையில், வார்டு உறுப்பினர்கள் சிலர், துணைத்தலைவருடன் இணைந்து கொண்டு பணத்துக்கு ஆசைபட்டு, ஊராட்சி வேலைகளை முடக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆடு, மாடு பெறும், பயனாளிகள் விண்ணப்பத் தேர்விலும் தலையீடு செய்து உறவினர்களுக்கு வழங்க அழுத்தம் கொடுக்கின்றனர்.மக்கள் சார்ந்த பணிகள் எதற்கும், துணைத்தலைவர் கையெழுத்திடாமல் முட்டுக்கட்டை போடுகிறார். மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து, சுய நோக்கத்திற்காக செயல்படுவதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனர் பொதுநல அறக்கட்டளை சார்பில் கொடுத்த மனுவில், 'தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி, கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறோம். வட்டியும், அசலும் சேர்த்து கடனை கட்டி வருகிறோம்.கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களுடன் பேசிய போது, ரிசர்வ் வங்கி வட்டியை தள்ளுபடி செய்தால், ஊரடங்கு மாதங்களுக்கான வட்டியை கேட்க மாட்டோம் என்கிறனர். சில நிறுவனங்கள் ஆறு மாத தவணை கட்டவில்லை என கூறி வண்டியை பறிமுதல் செய்து விட்டனர். எனவே, வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து அரசு உதவ வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X