பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.பி.எஸ்., கருவி வாங்க ஆணையர் உத்தரவு ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்.டி.ஓ.,விடம் மனு

Added : டிச 01, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:'குறிப்பிட்ட நிறுவனங்களில், ஜி.பி.எஸ்., கருவி வாங்க வேண்டும் என்ற, போக்குவரத்து கழக ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என, பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தத்திடம் கொடுத்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும்

பொள்ளாச்சி:'குறிப்பிட்ட நிறுவனங்களில், ஜி.பி.எஸ்., கருவி வாங்க வேண்டும் என்ற, போக்குவரத்து கழக ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என, பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தத்திடம் கொடுத்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம், 25ம் தேதி முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள், வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், லாரி உரிமையாளர்கள், காலாண்டு வரி, வாகன காப்பீடு ஆகியவை அரசின் உத்தரவுக்கேற்ப நிலுவையின்றி செலுத்தி வருகிறோம்.கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவது, வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற நடைமுறை இல்லை. தமிழகத்தில் மட்டும் நாளுக்கு நாள் புதிய ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது. டீசல் விலை, சுங்க கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத்தொகை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியிலும் சரக்கு லாரி வாடகை உயரவில்லை.எனவே, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனால், வெளிச்சந்தையில் தரமான ஒளிரும் பட்டைகள் அதிகபட்சமாக, 1,200 - 1,500 ரூபாய் வரை கிடைக்கும்.அரசாணையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் விலை, வாகனத்தின் நீளத்தை பொறுத்து அதிகபட்சமாக, 6,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தகுதிச்சான்றிதழ் பெறும் கனரக வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., எனப்படும் வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையரால் வழங்கப்பட்ட சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்ற ஆணைகள், லாரி உரிமையாளர்களுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X