சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு வீடுகளில் திருட்டு: போலீசார் விசாரணை

Added : டிச 01, 2020
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே இரு வீடுகளில் புகுந்து நகை, பணம், வாகனம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 65. விவசாயி. குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசிக்கும் இவர், இரு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து ஊரில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை திரும்பி வந்து

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே இரு வீடுகளில் புகுந்து நகை, பணம், வாகனம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 65. விவசாயி. குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசிக்கும் இவர், இரு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து ஊரில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது தெரிந்தது.அதே ஊருக்கு அருகில் அம்மன் நகரில் வசிப்பவர் கந்தசாமி, 45. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், 20 நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர் உடன் இருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணத்தையும், வெளியில் இருந்த ஸ்கூட்டரையும் திருடி சென்றனர். கருமத்தம்பட்டி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X