பொது செய்தி

தமிழ்நாடு

இடையூறு வாகனங்களால் விபத்து! ஓட்டுநர்களுக்கு தினமும் திக்... திக்...

Added : டிச 01, 2020
Share
Advertisement
சூலுார்:சூலுார் - திருச்சி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.சூலுார்-திருச்சி சாலை, காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி வரை அகலப்படுத்தப்பட்டது. சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல், சாலை விரிவாக்கப்பணி நடந்தது. அதனால், நகருக்குள்

சூலுார்:சூலுார் - திருச்சி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.சூலுார்-திருச்சி சாலை, காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி வரை அகலப்படுத்தப்பட்டது. சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல், சாலை விரிவாக்கப்பணி நடந்தது. அதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசலோ, விபத்துகளோ குறைந்தபாடில்லை. குறிப்பாக, தனியார் கல்லுாரி முதல் ரங்கநாதபுரம் வரை, அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.சாலையின் நடுவே டிவைடர்கள் வைத்தபின், சாலையின் அகலம் முன்பிருந்ததை விட குறைந்துள்ளது. மேலும், சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வங்கிகள் முன் நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களால், நெரிசல் மேலும் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயில் அருகே, பேரி கார்டுகள் வைக்கப்பட்டன.அதில், ஒரு பேரிகார்டு, வாகனம் மோதி சேத மடைந்ததால் அப்புறப் படுத்தப்பட்டு. இப்போது அந்த இடத்திலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரு பக்கம் பேரிகார்டு மறுபக்கம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்த இடத்தை கனரக வாகனங்கள் கடந்து செல்ல சிரமப் படுகின்றன. நேற்று அந்த இடத்தில், ஒரு இருசக்கர வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதி, 10க்கும் மேற்பட்ட பைக்குகள் கீழே விழுந்தன.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:சூலுார் - திருச்சி சாலையில், 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டிய போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன் நுழைவு வாயிலின் இரு புறமும், வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, போர்டுகள் கூட அங்கு இல்லை. இதனால், இங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவோர், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை சாலையை ஒட்டி நிறுத்துகின்றனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, திருச்சி சாலையில் போக்கு வரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X