பொது செய்தி

தமிழ்நாடு

பாக்கு மரங்களை தாக்கும் 'மாகாளி நோய்'

Added : டிச 01, 2020
Share
Advertisement
கூடலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 975 ஏக்கர்பரப்பளவில் பாக்கு பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால், பாக்கு மரங்களில் 'மாகாளி நோய்' தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து, கூடலுார், தோட்டகலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நோய் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து பாக்குகளை அகற்றுவது மூலம், நோய் பரவலை கட்டுபடுத்த

கூடலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 975 ஏக்கர்பரப்பளவில் பாக்கு பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால், பாக்கு மரங்களில் 'மாகாளி நோய்' தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து, கூடலுார், தோட்டகலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நோய் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து பாக்குகளை அகற்றுவது மூலம், நோய் பரவலை கட்டுபடுத்த முடியும். மேலும், ஒரு கிலோ 'காப்பர் சல்பேட்டினை' 50 லிட்டர் தண்ணீரிலும்; ஒரு கிலோ சுண்ணாம்பு துாளை, 50 லிட்டர் தண்ணீரிலும் தனித்தனியாக பிளாஸ்டிக் வாளியில் கலந்து, அதனை ஒன்றாக சேர்த்து கலக்கி, 2.5 ஏ 'போர்டோ' கலவை தயாரிக்க வேண்டும்.ஒரு லிட்டர் நீரில், 10 மில்லி போர்டோ கலவை கலந்து. பருவமழை துவங்கும் முன், சூரிய ஒளி இருக்கும் போது, பாக்கு குளைகளில் மீது தெளித்து வரவேண்டும். உயிரியல் கட்டுபடுத்தும் காரணியான,'பேசிலெஸ் சப்டிலிஸ்' நுண்ணுயிர் மருந்தை மாதம் ஒரு முறை, ஒரு லிட்டர் நீரில், 2 முதல் 5 கிராம் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X