உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
இலா. பிச்சுமணி ஐயர், தென்காசியிலிருந்து எழுதுகிறார்: நடக்கற சம்பவத்தை எல்லாம் பார்க்கறச்சே, ரொம்ப வேதனையா இருக்கு. சமீபத்துல, தி.மு.க., இளைஞரணிச் செயலர், அதான், ஸ்டாலின் மகன் உதயநிதி, தேர்தல் பிரசார கூட்டத்துல கலந்துக்குறதுக்காக, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை போயிருக்கார்... வழியில, அவா கட்சிக்காரா, திருச்சி அருள்மிகு கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில்லேயிருந்து, உதயநிதிக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கா. அதுக்காக, பூரண கும்பம், பரிவட்டத்தோட, சிவாச்சாரியார் எல்லாம் ரோட்ல காத்துண்டு இருந்திருக்கா. ஆனா, பூரண கும்ப மரியாதையை, உதயநிதி ஏத்துக்காம புறக்கணிச்சுட்டதா, செய்தி பார்த்தேன். இது, நம்மளோட மரியாதையை, நாமளே குறைச்சுக்குற மாதிரி இல்லையா!

குருக்கள் அண்ணா... நாம, பல காலமா, அரசியல்வாதிகள் வரும்போது, வாசலில் தட்டு
வச்சுண்டு நிற்கறது வழக்கமா இருக்கு. சுவாமிக்கு செய்யறதுக்குத்தான் நம்மளை எல்லாம் படைச்சுருக்கா. நாம கஷ்டப்பட்டு வேதம் படிச்சுட்டு, சுத்தபத்தமா இருக்கறதுனால தான்,
சுவாமிய தொட்டு கைங்கர்யம் பண்றதுக்கு, நமக்கு உரிமை குடுத்திருக்கா. எல்லா ஜாதிக்காராளும் இதுக்கு வரலாம், தப்பில்லே; அவாளும் வேதம் படிச்சுட்டு சுத்தமா இருந்தா, வரலாம்னு சட்டமே சொல்றது. ஆனாலும், காலங்காலமா நாம தான் பண்ணிண்டு இருக்கோம்; மத்த பிராமணாள் கூட, உள்ளே வர முடியாது. நமக்கு மட்டும் தான் சுவாமியைத் தொட்டு அபிஷேகம் செய்யறதுக்கும், ஆரத்தி எடுக்கறத்துக்கும், அலங்காரம் பண்றதுக்கும் உரிமை இருக்கு. அந்தளவுக்கு பய பக்தியோட இருக்கற நாம, அரசியல்வாதிகளுக்காக ரோட்ல தட்டேந்தி நின்னு, அவா போடற, 500 ரூவாவுக்காக அவமானப்படக் கூடாது பார்த்துக்கோங்கோ!
மனுஷாளுக்கு, குறிப்பா, கட்சிக்காராளுக்கு மரியாத தரணும்னு, யார் வந்து கேட்டாலும், 'நாங்க குருக்கள், வரக்கூடாது. கோவில் கதவைத் தாண்டி வெளில வரக் கூடாது'ன்னு சொல்ற தைரியத்தை, முதல்ல வளர்த்துக்கோங்கோ! அவாளால உங்களை என்ன பண்ணிட முடியும்? திட்டக் கூட முடியாது! கவர்மென்ட் சம்பளமா நமக்கு கெடைக்கறது; அது போறும். அதனால, 'கோவிலை விட்டு வெளில வந்து, ரோட்ல நிக்க முடியாது'ன்னு தைரியமா சொல்லிடுங்கோ! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போ இல்லை. அவாளை பத்தி பேசப்படாது. இருந்தாலும் அவா, காரை விட்டு இறங்காம, கதவு கிளாசை மட்டும் இறக்கி, தட்டுல, 500 ரூவா போட்டுட்டு, ஸ்வாமியை வேண்டிட்டு அப்படியே போயிடுவா... அந்த, 500 ரூவாவுக்காக நாம, நாலு மணி நேரமா காத்திருக்கணும். அது, அந்தக் காலத்தோட போனதோட போகட்டும். இனி வருங்காலத்துல, அப்படி செய்யாதீங்கோ! யார் கூப்பிட்டாலும், எத்தனை லட்சம் ரூவா கொடுத்தாலும் போகாதீங்கோ!

திருமண மண்டபத்திற்கு, மணமக்களை ஆசீர்வாதம் செய்யப் போறேள்; நல்ல விசேஷத்துக்கு போங்கோ! 'கோவில்லேர்ந்து வரேன்'னு சொல்லிண்டு போகவே போகாதேங்கோ! அதே மாதிரி, தனிப்பட்ட முறையில, நாலு மணி நேரம் காத்திருந்து தட்டேந்தற வேலைகளையெல்லாம், இப்பவே விட்டுருங்கோ. 'சுவாமிக்கு சேவை செய்யத் தான் நாங்க எல்லாம் இருக்கோம். ஆசாமிக்கு செய்ய மாட்டேன்'னு உறுதியா சொல்லிடுங்கோ...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE