விருத்தாசலம்; விருத்தாசலம் செராமிக் தொழில் கல்லுாரி விடுதி கட்டும் பணியை கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார். விருத்தாசலம் செராமிக் தொழில் கல்லுாரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர் படிக்கின்றனர். இங்குள்ள விடுதி கட்டடம் பழுதானதால், மாணவர்கள் வெளியில் வாடகைக்கு தங்கி படிக்கும் அவலம் ஏற்பட்டது. பழுதடைந்த விடுதி கட்டடத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் ரூ.1.65 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அதற்கான பூமி பூஜை நேற்று போடப்பட்டது.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பூமி பூஜையை துவக்கி வைத்தார். பொதுப் பணித் துறை கட்டட பிரிவு உதவி பொறியாளர் சதீஷ்குமார், கல்லுாரி முதல்வர் திருமுருகன், ஒப்பந்த தாரர்கள் சுபாஷ் சந்திரபோஸ், மதியழகன், அ.தி.மு.க., வட்ட செயலாளர் அருளாகரன், நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி, நிர்வாகிகள் சந்திரன், ஜெய்சங்கர், ராஜேந்திரன், பெரியசாமி, சோமு, முன்னாள் கவுன்சிலர் தங்கம்மாள், கிருஷ்ணராஜ், பாலசுந்தரம், மூர்த்தி, செந்தில் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE