பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடலுார்; சமூக இடைவெளியை பின்பற்றாத திருமண மண்டப உரிமையாளர்கள் மீது கொரோனா கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களுடன், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா,

கடலுார்; சமூக இடைவெளியை பின்பற்றாத திருமண மண்டப உரிமையாளர்கள் மீது கொரோனா கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களுடன், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார். எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, டி.ஆர்.ஓ.,(பொறுப்பு) கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது:திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பும், நிகழ்ச்சிகள் முடிந்த பின்பும் மண்டபங்களை சுத்தப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், பிளிச்சிங் பவுடர் போடுதல், கழிவுகள் அகற்ற வேண்டும்.மண்டபங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சமையலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் 100க்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும். பங்கேற்போர் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமி நாசினி உபயோகித்தல், முகக்கவசம் அணிய வேண்டும். நாற்காலிகள், கதவுகள், தாழ்ப்பாள்கள் மற்றும் உணவருந்தும் மேஜைகளை சுத்தப்படுத்த வேண்டும். திருமண மண்டபகங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.சமூக இடைவெளியை பின்பற்றாத மண்டப உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் மீது கொரோனா கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தொற்று பரவாமல் இருக்க மண்டப உரிமையாளர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X