சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ.,க்கு மிரட்டல் கடலுாரில் 4 பேர் கைது

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடலுார்; சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த சுத்துக்குளம் திரவுபதியம்மன் கோவில் அருகில் முதுநகர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதி செந்தில், 36; சிலம்பரசன், 36; அன்பரசன், 34; வேல்பிரகாஷ், 28;

கடலுார்; சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த சுத்துக்குளம் திரவுபதியம்மன் கோவில் அருகில் முதுநகர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதி செந்தில், 36; சிலம்பரசன், 36; அன்பரசன், 34; வேல்பிரகாஷ், 28; ஆகியோர் அவ்வழியாக சத்தமாக பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.இதனை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த செந்தில் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து அவரிடம் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். அவரின் மொபைல்போனையும் சேதப்படுத்தினர். புகாரின் பேரில் கடலுார், முதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து செந்தில் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X