விருத்தாசலம்; சேறும், சகதியுமாக உள்ள எ.வடக்குப்பம்- - எருமனுார் மாற்றுப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம சாலையில், தனியார் பள்ளி பஸ், லாரி, வேன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வந்தன.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த சாலையின் குறுக்கே செல்லும் விருத்தாசலம் - சேலம் ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அருகில் உள்ள ஓடைப் பாலத்தை மாற்றுப்பாதையாக, இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், 'நிவர்' புயலால் பெய்த கனமழையில் மாற்றுப்பாதை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.சேறும் சகதியுமாக உள்ள மாற்றுப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE