பொது செய்தி

தமிழ்நாடு

சுய உதவிக் குழுக்களுக்கு சேமிப்பு கடனுதவி வழங்கல்

Added : டிச 01, 2020
Share
Advertisement
பண்ருட்டி; பண்ருட்டியில் வாடகைலாசம் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சேமிப்பு கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது.வடகைலாசம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு சேமிப்பு

பண்ருட்டி; பண்ருட்டியில் வாடகைலாசம் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சேமிப்பு கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது.வடகைலாசம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு சேமிப்பு கடனுதவிகளை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வழங்கினார்.அண்ணா கிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், பண்ருட்டி முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர் செல்வம், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் பாபு புஷ்பராஜ், ஒன்றிய அவைத்தலைவர் ஜெகநாதன், நகர அம்மா பேரவை செயலாளர் செல்வம், விழமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சரஸ்வதி கோவிந்தன், துணைத் தலைவர் சத்யா ராமதாஸ், கூட்டுறவு சங்கத் தலைவர் ராம்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் கனகராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ரமாதேவி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X