விருத்தாசலம்; விருத்தாசலம் தொகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளிடம், சப் கலெக்டர் பிரவீன்குமார் வாக்காளர் சுருக்கப் பட்டியலை வழங்கினார்.தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், 2020 - 21ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, கடந்த வாரம் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் துவங்கியது. அதில், வாக்காளர்களிடம் சேர்த்தல், இணைத்தல், நீக்கம், இடம் பெயர்தல் உள்ளிட்ட 6, 7, 8, 8ஏ ஆகிய படிவங்கள் பெற்று 9, 10, 11, 11ஏ ஆகிய சுருக்க பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனை, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கி, அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வழங்கினார். நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார்கள் சிவக்குமார், சையது அபுதாகீர், தேர்தல் துணை தாசில்தார் அன்புராஜ், அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், தி.மு.க., நகர துணைச் செயலாளர் ராமு, காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், பா.ஜ., மாவட்ட பொருளாளர் முருகவேல், மா.கம்யூ., வட்ட செயலாளர் அசோகன், தே.மு.தி.க., இளங்கோவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE