சிதம்பரம்; காட்டுமன்னார்கோவிலில், மணிவிழா கண்ட தம்பதியர், கோவிலுக்கு பசுமாடு அன்பளிப்பாக வழங்கினர்.காட்டுமன்னார்கோவில் பி.வி.பி., குழும நிறுவனர் சதாசிவம் - கமலாம்பாள் தம்பதியினருக்கு மணி விழா நடந்தது. மணி விழாவையொட்டி, சொந்த ஊரான கொல்லிமலைக் கீழ்பாதி கிராமத்தில் உள்ள அகஸ்திய முனிவர் வழிபட்ட ஞானாம்பிகை உடனுறை சிவலோகநாதர் சுவாமி கோவிலுக்கு ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள கன்றுடன் பசு மாட்டை அன்பளிப்பாக வழங்கினர். அறநிலையத்துறை செயல் அலுவலர் சிங்கப்பெருமாள் பெற்றுக்கொண்டார்.பி.வி.பி., குழும நிர்வாக இயக்குனர் மிதுன்குமார், மேலாளர் சரவணன், முன்னாள் கூட்டுறவு வங்கி மேலாளர் கலியபெருமாள், எல்.ஐ.சி., முகவர் சேகர், கிராம முக்கியஸ்தர்கள் ராமானுஜம், ஆறுமுகம், திருநாவுக்கரசு, அமிர்தலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மணிவிழாக் கண்ட தம்பதிகளுக்கு கிராம மக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE