பண்ருட்டி; பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணி பாரபட்சமாக வழங்குவதாக அ.தி.மு.க., கவுன்சிலர் புகார் கூறினார்.பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.க்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன், துணை பி.டி.ஓ., பாண்டியன், துணை சேர்மன் தேவகி ஆடலரசன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் 34 ஊராட்சி களில் குடிநீர் இணைப்பு, பைப் லைன் போடுவதற்கு ரூ. 98.70 லட்சம், 57 இடங்களில் சேதமடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற ரூ. 2 கோடியே 26 லட்சத்து 4900 ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.கூட்டத்தில் த.வா.க., கவுன்சிலர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ஏ.புதுார் கிராமத்தில் சுடுகாட்டு பாதையில்லை. வடிகால் வசதியின்றி தண்ணீர் சாலையில் ஓடுவதால் வீணாகிறது என்றார்.த.வா.க., கவுன்சிலர் விஜயதேவி பேசுகை யில், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதால் பெரிய எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூட வேண்டும் என்றார். தி.மு.க., கவுன்சிலர் தனபதி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தகவல் கூறுவதில்லை என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் தேவநாதன் பேசுகையில், பாரபட்சமாக பணி ஒதுக்கப்படுகிறது. பணி தேர்வு குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை. ஆடு, கோழிகள் பயனாளிகள் தேர்வில் ஏஜெண்ட் மூலம் தேர்வு செய்கின்றனர். தனி கம்பெனி போல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு கவுன்சிலருக்கும் மரியாதை வழங்க வேண்டும் என்றார்.பி.டி.ஓ., சீனுவாசன் பேசுகையில், வரும்காலங்களில் கவுன்சிலர் கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். சேர்மன் பாலமுருகன் பேசுகையில், கவுன்சிலர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வருங்காலங்களில் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE