பொது செய்தி

தமிழ்நாடு

திருமாணிக்குழியில் ரோகினி தீபம் 

Added : டிச 01, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நேற்று ரோகினி தீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை தீபத்தையொட்டி அனைத்து கோவில்களிலும் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும்.கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் அம்புசாஷி சமேத வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் ரோகினி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படுவது சிறப்பு. அதே போல் நேற்று ரோகினி தீபம்

நடுவீரப்பட்டு: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நேற்று ரோகினி தீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை தீபத்தையொட்டி அனைத்து கோவில்களிலும் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும்.கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் அம்புசாஷி சமேத வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் ரோகினி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படுவது சிறப்பு. அதே போல் நேற்று ரோகினி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று காலை விநாயகர், அம்மன், வாமனபுரீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு கோவிலின் எதிரில் உள்ள மலையில் ரோகினி தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுவாமிகள் கோவில் உள் பிரகாரத்தில் உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X