சிக்னல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர கடைகள்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு வழியாக பஸ், லாரி உட்பட நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.இந்நிலையில்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு வழியாக பஸ், லாரி உட்பட நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.இந்நிலையில் சாலையோரம் தள்ளுவண்டி, பழக்கடைள் ஆக்கிரமிப்புகளால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுளற்ள நடைபாதை கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், விபத்துகள் ஏற்படுவதற்கான சூழலும் நிலவுகிறது.அதேபோல், பஸ் நிலையத்திலும் பயணிகள் நடந்து செல்லக்கூடிய வழியில் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுள்ளது.இதனால், பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நான்கு முனை சந்திப்பு மற்றும் பஸ் நிலைய பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X