விவசாயத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
காரைக்கால்; காரைக்காலில் விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவில்பத்து பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மதியழகன் தலைமை தாங்கினார். தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நுாறு நாள் வேலையை 200

காரைக்கால்; காரைக்காலில் விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பத்து பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மதியழகன் தலைமை தாங்கினார். தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நுாறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த ணேவ்டும். தினக்கூலி ரூ.500 அளிக்க வேண்டும். மழை நிவாரண நடவடிக்கையை உடனே துவங்கவேண்டும்.முடங்கி கிடக்கும் விவசாயத் தொழிலாளர் நலச்சங்கத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்பருத்தி, உளுந்து, பயிறு அனைத்து சிறப்புக்கூறு திட்டத்நிதியை முழுமையாக செலவு செய்ய வேண்டும். ரேஷன் கடையை திறந்து அரிசி, கோதுமை மற்றும் அத்தியாவசிய பொருட்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 50க்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X