புதுச்சேரி; கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் சார்பில் சிறந்த மக்கள் பணி சேவையாளர்களுக்கான அரிமதி தென்னகன் விருதுகள் வழங்கும் விழா, ஆனந்தரங்கப் பிள்ளை நகரில் நேற்று நடந்தது.அரிமதி அறவாழி வரவேற்றார்.எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினரான சப் கலெக்டர் சுதாகர், கொரோனா தடுப்புப் பணியில் சிறந்த களப்பணியாற்றிய துணை தாசில்தார்கள் செந்தில்குமார், முருகையன், அய்யனார் காத்தவராயன், செய்தி மற்றும் விளம்பரத்துறை, மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, மருத்துவர்கள் துரைசாமி, ரவீந்திரன், ரவிவர்மன்,லட்சுமணசாமி மற்றும் மாற்றுத் திறனாளி ஜோசப் அல்போன்ஸ் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை இளைஞர் அமைதி மைய நிர்வாகிகள் பிரவீன் சேஷாத்திரி, அறிவுடைநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.அரிமதி இளவேங்கை நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE