திண்டிவனம்; திண்டிவனத்தில் இறந்த பெண்ணின் கண்கள், நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் மூலம் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.திண்டிவனம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த ராஜகோபால் மனைவி அகிலாண்டேஸ்வரி இறந்து விட்டார். இதையெடுத்து, நண்பர்கள் லயன்ஸ் சங்க ஏற்பாட்டின்படி, உறவினர்களில் அனுமதியோடு இறந்த அகிலாண்டேஸ்வரியின் கண்களை தானமாகப் பெற்று, வேலூர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் நண்பர்கள் லயன்ஸ் சங்க தலைவர் ஏகாம்பரம், செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், சைமன் துரை சிங், லியோ உறுப்பினர் தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE