வீடு புகுந்து நகை திருட்டுவண்டலுார்: வண்டலுார் அடுத்த, மண்ணிவாக்கம், புதுநகர் குறிஞ்சிப்பூ தெருவைச் சேர்ந்தவர் முத்து, 70. இவர், மனைவி தனலட்சுமி, 63, உடன், த-னியாக வசித்து வருகிறார். கடந்த, 25ம் தேதி, தம்பதிகள், மகள் வீட்டிற்கு சென்றனர்.அதன்பின், நேற்று முன்தினம், அவர்கள், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, ஏழு சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயி தற்கொலைகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன், 70. விவசாயி. நேற்று முன்தினம், வயலுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் இறந்தார். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE