பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூர்- - தாம்பரம் பஸ் இயக்க கோரிக்கை

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்போரூர்; திருப்போரூரில் இருந்து, -தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட பஸ்சை, மீண்டும் இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர்- - தாம்பரம் இடையே, கண்ணகப்பட்டு, காலவாக்கம், கேளம்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இத்தடத்தில், 2007ல், மாநகர போக்குவரத்து பஸ் இயக்கம் துவங்கப்பட்டது.கடந்த, 2012ல், திருப்போரூர் தாலுகா தலைமையிடமாக உருவாக்கப்பட்டதை அடுத்து,

திருப்போரூர்; திருப்போரூரில் இருந்து, -தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட பஸ்சை, மீண்டும் இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர்- - தாம்பரம் இடையே, கண்ணகப்பட்டு, காலவாக்கம், கேளம்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இத்தடத்தில், 2007ல், மாநகர போக்குவரத்து பஸ் இயக்கம் துவங்கப்பட்டது.கடந்த, 2012ல், திருப்போரூர் தாலுகா தலைமையிடமாக உருவாக்கப்பட்டதை அடுத்து, திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் என, 86 நடைகள் இயக்கப்பட்டன.இந்நிலையில், கொரோனா காரணமாக, பஸ் சேவை நிறுத்தப்பட்ட பின், இத்தடத்தில் மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை.மாறாக, திருப்போரூர் வழியாக செல்லும் மாமல்லபுரம் - -தாம்பரம் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணியர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, திருப்போரூர் - -தாம்பரம் பஸ் இயக்கத்தை மீண்டும் தொடர, போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X