வாலாஜாபாத்; பரந்துார் சிற்றேரி மதகின் இரு புறங்களிலும், அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி மற்றும் சித்றேரி உள்ளது.இவ்விரு ஏரிகளிலும், குடிமராமத்து பணியில், 1.17 கோடி ரூபாய் செலவில், மதகு மற்றும் கரை பலப்படுத்தப்படும் பணி நடந்தது. அப்போது, புதிதாக கட்டப்பட்ட சிற்றேரி மதகின் இரு புறங்களிலும், கற்கள் பதிக்கவில்லை என, விவசாயிகள் இடையே புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, பணி ஒப்பந்தம் எடுத்தவர், சமீபத்தில் மதகின் இருபுறங்களிலும், வெள்ளை நிற கற்களைப் பதித்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'இந்தக் கற்கள் மீது சிமென்ட் பூச்சு பூசினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால், மழைக்கு கற்கள் பெயர்ந்துவிடும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE