பொது செய்தி

தமிழ்நாடு

1,330 குறள்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு கவுரவம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்போரூர்; கொரோனா ஊரடங்கு காலத்தில், முறையாக திருக்குறள் பயின்று, 1,330 குறள்களை ஒப்புவித்த மாணவர்கள், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.கல்பாக்கம், சென்னை அணுமின் நிலையத்தில், மின்சார பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனி, 67.இவர், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், திருவள்ளுவர் கல்வி மன்றம் வைத்துள்ளார். இம்மன்றத்தின்
 1,330 குறள்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு கவுரவம்

திருப்போரூர்; கொரோனா ஊரடங்கு காலத்தில், முறையாக திருக்குறள் பயின்று, 1,330 குறள்களை ஒப்புவித்த மாணவர்கள், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.

கல்பாக்கம், சென்னை அணுமின் நிலையத்தில், மின்சார பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனி, 67.இவர், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், திருவள்ளுவர் கல்வி மன்றம் வைத்துள்ளார். இம்மன்றத்தின் சார்பாக, திருக்குறள் படிக்கும் ஆர்வத்தை, மாணவர்களிடம் ஊக்குவித்து வருகிறார்.அதன்படி, கொரோனா ஊரடங்கில், நேரத்தை வீணாக்காமல், மாணவர்களை வீட்டிலிருந்தே திருக்குறள் படிக்க வைத்தார்.கேளம்பாக்கம், காலவக்கம், தையூர், படூர், கழிப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு பயிலும், 40 மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளித்தார்.தவிர, ஒரு குறளுக்கு 1 ரூபாய் வழங்கி, அவ்வப்போது மாணவர்களை ஊக்குவித்தார்.இதில், கேளம்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அனுஷ்கா மற்றும் மாம்பாக்கம் வேலம்மாள் வித்யாஷரம் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜிஷ்ணுவட்சன் ஆகியோர், 1,330 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தனர்.இவர்களுக்கான பாராட்டு விழா, நேற்று முன்தினம், கேளம்பாக்கத்தில் நடந்தது. விழாவில், அனைத்து குறள்களையும் ஒப்புவித்த மாணவர்களை, அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து, கேளம்பாக்கம் ஜோதி நகரிலிருந்து, ராஜேஸ்வரி நகர் வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.இதையடுத்து, அவர்களுக்கு, திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் பழனி, திருப்போரூர் தமிழ் முற்றம் தலைவர் வீரபத்திரன் ஆகியோர், 'திருக்குறள் நினைவாற்றல் திலகம்' என்ற விருது, 1,330 ரூபாய் மற்றும் திருவள்ளூர் சிலை வழங்கி, பாராட்டினர். தவிர, இருவருக்கும், தங்க நாணயம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X